தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில்….. 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு..!
தமிழகத்தில் காற்றுமாறுபாடு காரணமாக அடுத்த 48மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.