தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியில் காரணமாக 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆகிய 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி கோத்தகிரியல் 9, குன்னுரில் 7, சோத்துப்பாறையில் 6, அலகாரியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.