தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல்.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஜூலை 11-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் இன்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதலே பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்த கனமழை தொடர்ந்து மூன்று நாட்கள் அதாவது வருகின்ற ஜூலை 11- ம் தேதி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தேனி, சிவகங்கை, ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை கனமழை தொடரும்.