13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கும் எச்சரிக்கை!
சென்னையில், அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் முன்னதாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் நேற்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, இன்று மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருவாரூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை :
மேலும், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய கடலோரப்பலைகளில் கூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 50 கி.மீ மேல் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், இன்று மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.