அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு – வானிலை மையம்..!!
அரபிக் கடலில் வரும் 16ஆம் தேதி புயல் உருவாகக் கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மே 14ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி படி படியாக புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 16 ஆம் தேதி வடக்கு மற்றும் வட மேற்கு பகுதிகளை நோக்கி நகர்ந்து தீவிரப் புயலாக உருவெடுக்கும் என்பதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
மேலும் வருகின்ற 14 ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் கேரளா, லட்சத்தீவு, ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.