வெடிகுண்டு மிரட்டல் சென்னை விமான நிலையத்திற்கு விடுத்த இருவர் கைது !
வெடிகுண்டு மிரட்டல் சென்னை விமான நிலையத்திற்கு விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர் ஒருவர், விமானநிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து விமானநிலையத்தில் பலத்த சோதனை நடத்தப்பட்டது. இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனிடையே கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பை ஆராய்ந்ததில் மடிப்பாக்கம் பகுதியில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த சக்தி சரவணன் மற்றும் அவரது நண்பர் தீபானந்த் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.