தேவேந்திரகுல வேளாளர் என்ற கோரிக்கை ஏற்பு -பிரதமர் மோடி அறிவிப்பு
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகளும் தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்கப்படுவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய சாதிகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் ஒரே பொதுப் பெயரில் பெயரிட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இது தொடர்பான போராட்டங்களும் நடைபெற்று வந்தன.
ஆகவே அண்மையில் முதலமைச்சர் பழனிசாமி , தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளுக்கு பொதுப்பெயரிடுவது குறித்து அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று “தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட” மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும் என்று தெரிவித்தார்.7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பொதுப்பெயரில் அறிவிக்க கோரிய பரிந்துரை மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகளும் தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்கப்படுவர்.இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தேவேந்திர குலவேளாளர் கோரிக்கைக்கு நீண்டகாலம் தமிழக அரசு ஆதரவு அளித்து வருகிறது தேவேந்திர குல வேளாளர்கள் நாகரிகம் சார்ந்தது என்று பேசியுள்ளார்.