மத்திய அமைச்சரவையில் 3 இடங்களை கேட்டோம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல் !
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு 3 இடங்கள் கொடுக்க வேண்டும் என்று நங்கள் கேட்டிருந்ததாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.ஆனால் , அதிமுகவிற்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்க முடியும் என்று பாஜக கூறியதால் அமைச்சரவையில் இடம் பெற தாமதம் ஆவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து கூட்டணி கட்சிகளுக்கு யாருக்காவது நிச்சயம் இடம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 30ம் தேதி வெளியான புதிய அமைச்சரவையில் தமிழகத்திலிருந்து யாரும் இடம் பெறவில்லை.