சென்னையில் மத்திய உளவுத்துறை, கியூ பிரிவு சோதனை!
சென்னை கடற்கரை சாலையில் உள்ள செல்போன் கடையில் மத்திய உளவுத்துறை மற்றும் தமிழ்நாடு கியூ பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் நேற்று பெங்களுருவில் இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரை பிடித்ததாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இலங்கை நபர் பிடிப்பட்டதை தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள கடைகளில் ஆய்வு நடைபெறுகிறது. அதன்படி, பெங்களுருவில் ஒருவரை பிடித்து நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக சென்னை பாரிமுனையில் உள்ள மன்சூர் என்பவரின் கடையில் ஆய்வு நடைபெறுவதாக கூறப்படுகிறது. ராயபுரத்தை சேர்ந்த மன்சூர் என்பவரின் செல்போன் கடையை அவரது சகோதரர் ரியாஸ், கபீர் நடத்தி வருகின்றனர்.