#Breaking:”மத்திய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு;தமிழக அரசு அமைக்க வேண்டும்”-உயர்நீதிமன்றம் உத்தரவு…!

Published by
Edison
  • மத்திய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்க வேண்டும்,
  • தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,121 கோயில்கள் உள்ளன.அவற்றில் 8450 கோயில்களானது,100 ஆண்டுகள் மிகவும் பழைமை வாய்ந்தவையாக உள்ளன என்றும்,

மேலும்,6414 கோயில்கள் சிறிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்றும்,530 கோயில்கள் பாதி சேதமடைந்ததாகவும், 716 கோயிகள் முழுமையாக சேதமடைந்ததாகவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

மேலும்,இக்கோயில்களை முறையாக சீரமைக்கப்படுவதாகவும் அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் அவர்களின் அமர்வு,கோயில்கள் பாதுகாப்பு குறித்து முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதாவது,தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்,

  • மத்திய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்க வேண்டும்.
  • நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும்.
  • கோயில்களின் பட்டியலை தயாரித்து,ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும்.
  • கோயில்களில் உள்ள சிலைகள்,நகைகள்,உள்ளிட்டவற்றை,பட்டியலாக தயாரிக்க வேண்டும்.
  • கோயில்களின் சிலைகள்,நகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளங்களில் வெளியிட வேண்டும்.
  • கோயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்.
  • கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை வகுத்து உடனடியாக வெளியிட வேண்டும்.
  • அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு,புராதான கோயில்கள் உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் பாதுகாப்பதற்கு,தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Recent Posts

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

11 minutes ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

44 minutes ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

1 hour ago

இந்தி பெயரில் பாட நூல் வெளியான விவகாரம் – NCERT கொடுத்த விளக்கம்.!

சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…

2 hours ago

குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

2 hours ago

துரை வைகோ பதவி விலகல்: “நாளை சுமூகத் தீர்வு எட்டப்படும்” – மதிமுக பொருளாளர்.!

சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…

3 hours ago