பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் அமித்ஷா.
திண்டுக்கலில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு மீண்டும் புறப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.
மாலை 3 மணி அளவில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்று மாலை 4 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார் அமித்ஷா. இதனிடையே, சென்னை, ஆளுநர் மாளிகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்கள் வரவேற்றார்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…