எம்.பி-க்களுக்கு வழங்கப்படும் நிதியை மத்திய அரசு சரியாக வழங்கவில்லை – கனிமொழி எம்.பி
மக்கள் பிரச்சனைகளை நேரடியாக சென்று தீர்வு காணும் முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என்று கனிமொழி எம்.பி புகழாரம்.
தூத்துக்குடி,கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 9 வார்டுக்கு வரும் 29-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து கடம்பூர் காமராஜர் சிலை அருகே பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய கனிமொழி எம்.பி, வீடு தேடி மருத்துவம், காலை உணவு திட்டம் போன்ற திமுக அரசின் திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார். மக்கள் பிரச்சனைகளை நேரடியாக சென்று தீர்வு காணும் முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என்றும் கூறிய அவர், எம்.பி-க்களுக்கு வழங்கப்படும் நிதியை மத்திய அரசு சரியாக வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.