தமிழ்நாடு அரசின் காவல்துறையை மதிக்காமல் மத்திய அரசு இதுபோன்ற செயல்களை ஈடுபட்டுள்ளது – நெல்லை முபாரக்
சிறுபான்மையினரை ஒடுக்குவதற்காக என்ஐஏ இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது,முடக்கப்படுகின்றது என நெல்லை முபராக் தெரிவித்துள்ளார்.
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதில் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரில் தமிழகத்தில் 10 பேர் உள்பட நாடு முழுவதும் இதுவரை 106 பேர் PIF நிர்வாகிகளை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
இதுகுறித்து, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்போடு என்ஐஏ சோதனை மேற்கொண்டுள்ளது. இது தமிழ்நாடு அரசிற்கு விடப்பட்ட சவால், மாநிலத்தின் உரிமைக்கு விடப்பட்ட சவால் தமிழ்நாடு அரசின் காவல்துறையை மதிக்காமல் மத்திய அரசு இதுபோன்ற செயல்களை ஈடுபட்டுள்ளது.
சிறுபான்மையினரை ஒடுக்குவதற்காக என்ஐஏ இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது,முடக்கப்படுகின்றது. எதற்காக சோதனை செய்கிறோம் என்று கூட சொல்லாமல் உரிமைகளை மீறி செயல்பட்டுள்ளது என்ஐஏ என தெரிவித்துள்ளார்.