கார்ப்பரேட்டுகளுக்கு கார்ப்பெட் விரிக்கும் மத்திய அரசு.. மு.க.ஸ்டாலின்.!
இந்தியாவில் தற்போது, “சூழலியல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது.
அந்த வரையறையின் படி “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், பல தலைவர்கள் புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு 2020-க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிட்டு உள்ள அறிக்கையில், சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை 2020-ஐ மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாநிலங்களை புறக்கணிக்கும் விதத்தில் புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பேரிடர்கால நெருக்கடியைப் பயன்படுத்தி – கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகுலுக்கி, பாஜக அரசு வெளியிட்டுள்ள ‘புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை – 2020’-க்கு திமுக சார்பில் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
“கார்ப்பரேட்டுகளுக்கு ‘கார்ப்பெட்’ விரிக்கும் பாஜக அரசின் ‘சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020’-ஐ திரும்பப்பெற வேண்டும்”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.
Link: https://t.co/p14CJaYtlo#ScrapEIA2020 pic.twitter.com/xCiVB0SoE0
— DMK (@arivalayam) July 26, 2020