நீட் தேர்வை நியாயப்படுத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Published by
கெளதம்

சென்னை : ஏழை மாணவர்கள் மற்றும் சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நீட் தேர்வில் வினா கசிவு, கருணை மதிப்பெண்கள், முன்எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் 720 மதிப்பெண்ணுக்கு 720 மதிப்பெண் எடுத்தார்கள்.

இவர்களில் 6 பேர் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என தெரிய வந்ததும் பெரிய விவாதத்தை எழுப்பியது. இவ்வாறு, நீட் தேர்வில் பல்வேறு  முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் நீட் தேர்வு சர்ச்சைகளை தொடர்ந்து வரும் நிலையில், கோத்ராவில் உள்ள ஒரு மையத்தில் மருத்துவத் தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி பயிற்சி மையத்தின் தலைவர் உட்பட 5 பேரை குஜராத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதற்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் ரீ ட்வீட் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ” நீட் தேர்வு விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சைகள் அதன் சமத்துவமின்மையை காட்டுகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிரானதாக நீட் தேர்வு உள்ளது.

ஏழைகள் மற்றும் சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். அனிதா தொடங்கி இன்னும் எத்தனையோ மாணவர்கள் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களை நாம் பார்த்துவருகிறோம்.

ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும், மாறாக அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை நீட் தேர்வு தடுக்கிறது. நீட் விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் நீட் தேர்வில் உள்ள சமத்துவமின்மையை எடுத்துக்காட்டுகிறது.

கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கு பதிலாக அந்த மாணவர்களின் வாய்ப்பை நீட் தடுக்கிறது” என்று குஜராத்தில் நீட் தேர்வு முறைகேட்டில் 5 பேர் கைதாகியுள்ளதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…

7 hours ago

CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…

7 hours ago

“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

8 hours ago

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

9 hours ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

10 hours ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

11 hours ago