தமிழக அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி
8 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் பாஜக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாழடிக்கிறது.
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலாளர், 22% வரை ஈரப்பதமுள்ள நெல்-ஐ கொள்முதல் செய்ய அனுமதி வேண்டி மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து கே.எஸ்.அழகிரி, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 22 % வரை தளர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது; தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக கூட்டுவோம் என வாக்குறுதி கொடுத்தனர்; 8 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை பாலடிக்கின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.