தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி விடுவித்தது மத்திய அரசு!!
வருவாய் பற்றாக்குறை நிதியாக தமிழகத்திற்கு நான்காவது தவணையாக ரூ.183.67 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு.
வருவாய் பற்றாக்குறை நிதியாக தமிழகத்துக்கு நான்காவது தவணையாக ரூ.183.67 கோடி விடுவித்தது மத்திய அரசு. 2021-22 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை நிதியாக தமிழகத்துக்கு இதுவரை ரூ.734.67 கோடி விடுவித்துள்ளது மத்திய அரசு.
15-ஆவது நிதிக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை நிதியை மாதந்தோறும் ஒவ்வொரு தவணைகளாக விடுவித்து வருகிறது.
இதில் நான்காவது தவணையாக தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை வருவாய்ப் பற்றாக்குறை நிதியாக மத்திய அரசு விடுவித்துள்ளது. 17 மாநிலங்களுக்கு இதுவரை 4 தவணைகளையும் சேர்த்து ரூ.39,484 கோடி நிதி விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.