மத்திய அரசு பெண் ஊழியரை வன்கொடுமை செய்தவருக்கு முன்ஜாமீன் மறுப்பு .!

Published by
murugan
  • சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெண் ஒருவர் மத்திய அரசு ஊழியராக வேலை செய்து வருகிறார்.
  • அவரை அண்ணாநகர் தெற்கு காலனியை சேர்ந்த வெள்ளைதேவன் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து வன்கொடுமை செய்து உள்ளார்.

சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெண் ஒருவர் வயது (32) .இவர் மத்திய அரசு ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில்  நான் கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வருகிறேன்.

அண்ணாநகர் தெற்கு காலனியை சேர்ந்த வெள்ளைதேவன் (24), என்னிடம் தம்பி போல பழகி வந்தான். அவன் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றான். அங்கு “கேக்” வெட்டிய பிறகு நான் வீட்டிற்கு புறப்பட்டபோது எனக்கு அவன் குளிர்பானம் கொடுத்தான். அதை குடித்ததும் நான் மயங்கி  விட்டேன்.

பிறகு கண் விழித்து பார்த்தபோது நான் நிர்வாணமாக  இருந்தேன். என்னை என்ன செய்தாய்.? எனகதறி அழுதபோது அவன் என்னுடைய பிறந்தநாள் பரிசே நீதான் என கூறினான். மேலும் ஆபாசமாக வீடியோவும் எடுத்துள்ளான். அந்த வீடியோவை காட்டி அவ்வப்போது என்னிடம் பணம் பறித்து வருகிறான்.

ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அந்த வீடீயோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுகிறான். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி,  இதுவரை  ரூ.15 லட்சம் பறித்துள்ளான். தற்போது திருமணம் செய்துக்கொள்ள முடியாது என கூறுகிறான் என புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வெள்ளைதேவனை கைது செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது.

வெள்ளைதேவனுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என அந்த பெண் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இறுதியாக வெள்ளைதேவனுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்து விட்டனர்.

Published by
murugan

Recent Posts

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

33 mins ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

1 hour ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

2 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!

மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…

2 hours ago

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

2 hours ago

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

3 hours ago