மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் – கே.எஸ் அழகிரி

Default Image

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசின் அலுவலங்கள் முன்பு நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்.

இந்தாண்டு நடைபெற இருக்கும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதனிடையே, நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.

மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ மற்றும் நீட் ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவித்தது. இதனால் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கே.எஸ் அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நிலவுகிற பதற்றமான சூழலின் அடிப்படையில், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை உடனடியாக தள்ளிவைக்க வேண்டும் என்றும் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. இதன்காரணமாக மாணவர்கள் அச்சப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்