வேலுமணிக்காக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராவதா? – கடும் எதிர்ப்பு!
வேலுமணி மீதான ஊழல் வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராவதற்கு கடும் கண்டனம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் வேலுமணி சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு ஆஜராவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கோரி அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஆட்சி மாற்றத்தை அடுத்து வேலுமணி உள்பட 17 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்காக மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜரானதால் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மூத்த வழக்கறிஞர் எஸ்வி ராஜு ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்காக போலி என்கவுண்டர் வழக்கில் ஆஜரானார். தற்போது வேலுமணி மீதான ஊழல் வழக்கில் ஆஜரானதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.