மத்திய அரசின் நிறுவனங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு தான் சொந்தம் …! வைகோ
மத்திய அரசின் நிறுவனங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு தான் சொந்தம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு தான் சொந்தம் என்று சொல்லும் காலம் இன்னும் 50 ஆண்டுகளில் வரும்.கஜா புயல் பாதிப்பிற்கு ரூ 50 ஆயிரம் கோடி கொடுத்தாலும் விவசாயிகளை மீட்க முடியாது என்ற நிலையில் ரூ 353 கோடி நிதி ஒதுக்கி உள்ளது மத்திய அரசு என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.