பாரத் நெட் திட்டத்திற்கு மத்திய அரசு தடை ஏதும் செய்யவில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
ஸ்டாலின் கூறுவது போல பாரத் நெட் திட்டத்திற்கு மத்திய அரசு தடை ஏதும் செய்யவில்லை என்று ஆர்.பி.உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில், பாரத் நெட் திட்டத்திற்கு மத்திய அரசு தடை ஏதும் செய்யவில்லை என்று, திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள கிராமங்களை ஒன்றிணைக்கும் பாரத் நெட் திட்டத்திற்கு வலைத்தளம் மூலமாக, கடந்த வருடம், டிசம்பர் 5-ம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டப்படி திருத்திய ஒப்பந்தப்புள்ளிகளாக, 2021-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதிக்கும் பாரத் நெட் திட்டத்தை நிறைவேற்ற திருத்திய ஒப்பந்த புள்ளிகளாக வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதில் எந்த வரையறை மீறல்களும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த ஒப்பந்தப்புள்ளியில், உள்நாட்டு தயாரிப்பாளர்கள், போட்டியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது முற்றிலும் தவறானது. ஆனால், பாரத் நெட் திட்டம் குறித்து, மு.க.ஸ்டாலின் அவர்கள், கற்பனை கலந்த கதைகளை கட்டவிழ்த்து விடுவதாகவும், மேலும், ஸ்டாலின் கூறுவது போல பாரத் நெட் திட்டத்திற்கு மத்திய அரசு தடை ஏதும் செய்யவில்லை என்று ஆர்.பி.உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.