மிக்ஜாம் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.276 கோடி.! மத்திய அரசு அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

Flood Relief Amount : மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தற்போது 276 கோடி ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளது மத்திய அரசு.

தமிழகத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் இரு புயல்கள் தாக்கின. அதில் முதலாக மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டன. அதே போல, டிசம்பர் இரண்டாம் பாதியில் தென்தமிழகத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டத்திலும் வெள்ளத்தால் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.

டிசம்பர் மாத கனமழையால் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதை அடுத்து புயல் வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு போதிய அளவு நிவாரண நிதியை கேட்டு இருந்தது. அப்போது, மத்திய அரசு குழு தமிழகம் வந்து வெள்ளத்தால் பாதிப்பப்படைந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.

வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய தமிழக அரசு சார்பில் சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்கப்ட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கான நிவாரண தொகையை மத்திய அரசு கொடுக்கவில்லை என்றும், வழக்கமாக ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு அளிக்கும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் சிறிய தொகையை மட்டுமே மத்திய அரசு அளித்ததாகவும் தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. தமிழக அரசு சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சமயத்தில், தற்போது மிக்ஜாம் புயல் மற்றும் தென் தமிழக வெள்ள பாதிப்புக்கு என தனியே நிவாரண தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு 285.54 கோடி ரூபாயும், தென் தமிழக வெள்ள பாதிப்புக்கு 397.13 கோடி ரூபாயும், தேசிய பேரிடர் நிதி தமிழகத்திற்கு என 406.57 கோடி ரூபாயும் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதில் முதற்கட்டமாக, மிக்ஜாம் புயல் வெள்ளத்திற்கு 115.49 கோடி ரூபாய் அளிக்கவும், தென் தமிழக வெள்ள பாதிப்புக்கு 160.61 கோடி ரூபாய் என மொத்தமாக 276 கோடி ருபாய் தற்போது உடனடியாக அளிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதே போல , கார்நாடகாவில் ஏற்பட்ட வறட்சிக்கு நிவாரணமாக 3,498 கோடி ரூபாயும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 44 கோடி ரூபாயும் அளிக்க ஒப்புதல் அளித்து, முதற்கட்டமாக கர்நாடகாவுக்கு 3,454 கோடி ரூபாய் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு.

கர்நாடகாவில் தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு 14 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது என்பதும் , வரும் மே மாதம் 7ஆம் தேதி மீதம் உள்ள 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும், மாநில எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

3 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

5 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

6 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

7 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

8 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

8 hours ago