மத்திய அரசு மாநிலங்களுக்கு போதுமான அளவு தடுப்பூசியை வழங்கவில்லை – அபிஜித் பானர்ஜி!

மாநிலங்களுக்கு போதுமான அளவு தடுப்பூசியை வழங்கும் திறன் மத்திய அரசுக்கு இல்லை என அபிஜித் பானர்ஜி அவர்கள் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தான் குறைந்துள்ளது. அடுத்ததாக கொரோனா மூன்றாம் அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலையை எப்படி கையாள்வது என்பது தொடர்பான உலகளாவிய ஆலோசனைக் கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் நடத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி அவர்கள் கூட்டத்தில் பேசிய பொழுது, நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் நாட்டிற்காக தடுப்பூசி உற்பத்தி செய்யக்கூடிய திறன் மத்திய அரசிடம் இல்லாதது தான் என கூறியுள்ளார். மேலும், மாநிலங்கள் அனைத்திற்கும் போதிய அளவிலான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க தவறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025