Y பிரிவு Z பிரிவாக உயர்வு.! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதுகாப்பின் முக்கிய அம்சங்கள்..
பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Y பிரிவு பாதுகாப்பானது Z பிரிவு பாதுகாப்பாக மாற்றி அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் தலைவர்கள் பலருக்கும் பாதுக்காப்பு கருதி மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு வசதிகளை அளித்து வரும். அந்த வகையில், பாஜக தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலைக்கு அவரது பாதுகாப்பு கருதி Z பிரிவு பாதுக்காப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில் 12 CRBF பாதுகாப்பு வீரர்கள் பணியில் இருக்கிறார்கள். Z பிரிவு பாதுகாப்பு படையில் 28 முதல் 33 CRBF பாதுகாப்பு வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.