கோடை கால கொண்டாட்டம்.! தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…
கோடைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே.
கிட்டத்தட்ட கோடை நெருங்கி விட்டது என்றே தான் சோலா வேண்டும். கோடை வராமலே வெயில் வெளுத்து வாங்குது. கோடை வந்தால் என்ன நிலைமை என்று தெரியவில்லை. அந்த வகையில், கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், விரைவில் மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறையும் வந்துவிட்டது.
இந்நிலையில், மாணவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் விடுமுறை வந்ததும், தங்களது சொந்த ஊர்களுக்கோ அல்லது விடுமுறைக்காக வெளி ஊர்களுக்கோ செல்வதுண்டு. இதனை கருத்தில் கொண்டு, பயணிகளின் கூட்ட நெரிசல் தவிர்க்க….. கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால், தமிழகத்திற்கு பல்வேறு சிறப்பு ரயில்களைதெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடைக்கால சிறப்பு ரயில்கள்:
தாம்பரம் – நெல்லை, (ஏப்ரல் 27, மே 4, 11, 18, 25) ஆகிய 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர் வழியாக நெல்லையை அடையும்.
நாகர்கோவில் – தாம்பரம், (ஏப்ரல் 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25, ஜூலை 2) ஆகிய 11 நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரயிலானது நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் அடையும்.
நெல்லை – சென்னை எழும்பூர் (ஏப்ரல் 28, மே 5, 12, 19, 26) ஆகிய 5 நாட்கள் நெல்லையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு எழும்பூரை அடையும்.
தாம்பரம் – திருநெல்வேலி (ஏப்ரல் 26, மே 3, 10, 17, 24) ஆகிய 5 நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் போர்ட், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும்