2023 கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!

Khelo India 2023

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி.

நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் முதலமைச்சர்.

தமிழ்நாட்டின் கலாச்சாரம் விருந்தோம்பலை உணர்த்தும் வகையில் கேலோ இந்தியா போட்டி நடத்தப்படும். இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டி சிறந்த களமாக அமையும். எனவே, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை அனைவரும் கண்டது போல், தமிழ்நாடு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளையும் தகுந்த கம்பீரத்துடன் நடத்தி, தமிழ் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்தும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று, கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய ஒப்புதல் அளித்ததற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நன்றி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு தமிழ்நாட்டை  செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை கேலோ இந்தியா போட்டியை சிறப்பான வகையில் நடத்தி தரும் என்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்