புதிய மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி – அமைச்சர்

Default Image

மருத்துவ படிப்பில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.

சென்னை எழும்பரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லுரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

அதன்படி, 1,650 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை மருத்துவ கல்லுரிகளில் தலா 150 இடங்களுக்கு உடனே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல் மருத்துவ கல்லுரிகளில் தலா 100 இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியள்ளதாக அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், அம்மா மினி க்ளினிக் என்பது பெயரளவில் தான் இருந்தது. எந்த இடத்திலும் பயன்பாட்டில் இல்லை என்றும் பயனளிக்கவில்லை எனவும் குற்றசாட்டினார். இது விளம்பர நோக்கத்தில் செய்யப்பட்ட விஷயம் தான். இதுபோன்று அம்மா ஆட்சியில் நிறைய திட்டங்கள் விளம்பர நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளது என விமர்சித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்