சபரிமலை சர்ச்சை……..வெடித்த போராட்டம்…….3 மாநில அரசுகள்……..சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை எடுங்கள்….மத்திய அரசு……அவசர கடிதம்…!!!

Default Image

சபரிமலை ஐயப்பன் கோவில் பெண்கள் அனுமத்திப்பதில் போராட்டம் நடைபெற்று வருவதை முன்னிட்டுச் சட்டம் ஒழுங்கைக் காக்க நடவடிக்கை எடுக்க 3 மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் பெண்கள் அனுமத்திப்பதில் போராட்டம் நடைபெற்று வருவதை முன்னிட்டுச் சட்டம் ஒழுங்கைக் காக்க நடவடிக்கைஎடுக்குமாறு கேரள, தமிழக, கர்நாடக மாநிலத் தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் முன்கூட்டியே அறிவிக்கை அனுப்பியுள்ளது.
Image result for sabarimala

இந்நிலையில் அக்டோபர் 15ஆம் நாள், மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய அறிவிக்கையில், சபரிமலை ஐயப்பன் கோவில் மாத பூசைக்காக அக்டோபர் 17அன்று நடைதிறக்கப்டுவதாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்ததையடுத்துப் பல்வேறு பிரிவினர் போராட்டம் அறிவித்துள்ளதாலும் சபரிமலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
Related image
மேலும் பெண்கள் அமைப்பினரும் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் போராட்டம் அறிவித்துள்ளதையும், அதேசமயத்தில் பெண்களின் கோவில் நுழைவு முயற்சியைத் தடுப்போம் எனப் பல்வேறு இயக்கங்கள் அறிவித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துக் கேரளத்திலும் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் ஐயப்ப பக்தர்களும், இந்து இயக்கங்களும் கடும் போராட்டம் அறிவித்ததையும் குறிப்பிட்டுள்ளது.
Image result for sabarimala
இந்நிலையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அசம்பாவிதங்கள் நிகழாதபடி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Related image
மேலும் சட்டம் ஒழுங்கைக் காக்கத் தடை உத்தரவு பிறப்பிப்பதுடன் , சமூக ஊடகங்கள், இணையத்தளச் சேவைகள் வழியாகத் சபரிமலை தொடர்பான தவறான தகவல்கள் பரவாமல் இருக்கக் கண்காணிக்குமாறும் 3 மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்