மய்யம் கொடிகள் தமிழ்நாடு முழுவதும் பறக்க வழிவகுக்க வேண்டும் – கமலஹாசன்
அழகான வெண் மேகக்கூட்டங்கள் போல, நம் மய்யக் கொடிகள் தமிழ்நாடு முழுவதும் பறக்க வழிவகுக்க வேண்டும் என கமல்ஹாசன் அறிக்கை.
வரும் பிப்.21-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி 6-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கமலஹாசன் அறிக்கை
அந்த அறிக்கையில், ‘வருகின்ற பிப்ரவரி 21-ம் தேதி நம் கட்சியின் 6-ம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் விதமாக, கட்சி வளர்ச்சிப்பணியாற்ற கிராமங்களை நோக்கி நாம் செல்ல வேண்டும். கட்சியினர் அனைவரும் மக்கள் நீதி மய்யம் கொடியை பிப்ரவரி 21-ம் தேதி, நகரங்களில் மட்டுமின்றி, அனைத்து கிராமங்களிலும் ஏற்ற வேண்டும்.
அழகான வெண் மேகக்கூட்டங்கள் போல, நம் மய்யக் கொடிகள் தமிழ்நாடு முழுவதும் பறக்க வழிவகுக்க வேண்டும்.
நம் கட்சி, நம் கொடி, என்ற உணர்வோடு மக்கள் நீதி மய்யத்தினர் அனைவரும் தங்கள் பகுதியில் மாற்று கட்சியினர் கொடிகளைவிட அதிகமான இடங்களில் நம் கொடி பறக்க விடுவதோடு, தங்கள் இல்லங்களிலும் கொடி ஏற்றி நம் கட்சியின் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட கேட்டுக்கொள்கிறேன்.
நாளை நமதே!’ என தெரிவித்துள்ளார்.