‘பப்ஜி’ மதனிடம் 2-வது நாளாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘பப்ஜி’ விளையாடி ஆபாசமாக பேசி யூடியூப்பில் வீடியோ பதிவை செய்து வந்ததை தொடர்ந்து, யூடியூபர் பப்ஜி மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பப்ஜி மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், மதன் விசாரணைக்கு ஆஜரகாமல் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து, யூ டியூபர் பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பப்ஜி மதன் நடத்தி வந்த யூடியூப் சேனலின் அட்மினாக செயல்பட்டு வந்த அவரது மனைவி கிருத்தகா கைது செய்யப்பட்டார். சமீபத்தில் மதனை தர்மபுரியில் வைத்து கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பண மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதைதொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் பப்ஜி மதன் ஆஜர்படுத்தப்பட்டார். பப்ஜி மதனை ஜூலை 3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், மதன் மீது மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம் என மின்னஞ்சல் முகவரியை மத்திய குற்ற பிரிவு போலீசார் வெளியிட்டனர்.
அதன் அடிப்படையில் நூற்றுக்கணக்கான புகார்கள் மதன் மீது வந்தது. இந்நிலையில், போலீஸ் காவலில் மதனை எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முதல் விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இன்று 2-வது நாளாக மதனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய விசாணைக்கு பின்னர் மதன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…