மத்திய பட்ஜெட் தாக்கல் – மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒன்றிய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது என மத்திய பட்ஜெட் குறித்து முதல்வர் கருத்து.
நாடாளுமன்றத்தில் இன்று 2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், மத்திய பட்ஜெட் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றிலிருந்து நாடு மீண்டு வரும் இச்சூழலில், ஒன்றிய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்குப் புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத ஒன்றிய நிதிநிலை அறிக்கை – தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.#CMMKSTALIN l #TNDIPR l@cmotamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/6crgai0hRO— TN DIPR (@TNDIPRNEWS) February 1, 2023