மாணவர்கள் கல்வி தொடர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் – விஜயகாந்த்
உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த 20 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையே இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வின் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு மத்தியில் சிக்கிய இந்திய மாணவர்களை மீட்க, மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டது. இந்த நிலையில், உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் கங்கா திட்டம் தொடங்கப்பட்டது. கடும் சவால்களுக்கு இடையே உக்ரைனிலிருந்து 22,500க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியாவிலேயே அவர்கள் கல்வியை நிறைவு செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தாமல் நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவர்கள் கல்வி தொடர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்.இந்தியாவில் செயல்படும் அரசு, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்து, அந்த இடங்களில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவ, மாணவியர்களை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மாணவர்கள் கல்வி தொடர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்.இந்தியாவில் செயல்படும் அரசு, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்து, அந்த இடங்களில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவ, மாணவியர்களை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். (2-2) pic.twitter.com/07e45c2Yxv
— Vijayakant (@iVijayakant) March 15, 2022