நாப்கின் வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நாப்கின் தயாரிக்க உபயோகப்படுத்தும் பொருள்களை பாக்கெட்டில் அச்சியிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா தாக்கல் செய்த மனுவில் நாப்கின் தயாரிக்கும் நிறுவனங்கள் எந்தெந்த பொருட்களை கொண்டு தயார் செய்யப்படுகின்றது, போன்ற விவரங்களை இந்த பாக்கெட்டில் அச்சியிடவில்லை என தெரிவித்தார்.
சுகாதாரமில்லாத நாப்கின் பயன்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு புற்றுநோய், கருப்பை, சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே எந்தெந்த பொருட்களை கொண்டு நாப்கின் உருவாக்கப்பட்டது என்ற விவரங்களை பாக்கெட்டுகளில் இடம்பெற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.