உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் …! வைகோ
உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக ஈரோடு மூலக்கரையில் நாளை விவசாயிகள் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.