நடப்பு 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில், ஜுன் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட உள்ளது அதில், ‘‘அனைவரிடம் இருந்தும் 31 கேள்விகளை கேட்டு விவரங்களை சேகரிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.அந்த கேள்விகள்,
1. கட்டட எண்
2. சென்சஸ் வீட்டு எண்
3. தரை, சுற்றுச்சுவர், கூரை விவரம்.
4. எதற்காக வீடு பயன்படுத்தப்படுகிறது.
5. வீட்டின் நிலை
6. குடும்ப எண்.
7. குடும்பத்தின் மொத்த உறுப்பினர்கள்.
8. குடும்பத் தலைவரின் பெயர்
9. குடும்பத்தலைவரின் பாலினம்.
10. குடும்பத் தலைவர் எஸ்சி/எஸ்டி அல்லது பிற இனத்தைச் சேர்ந்தவரா?
11. சொந்த வீடா? வாடகை வீடா.
12. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை
13. வீட்டில் திருமணமான ஜோடிகளின் எண்ணிக்கை.
14. குடிநீரின் ஆதாரம்.
15. எந்த வகையில் குடிநீர் பெறப்படுகிறது.
16. வீட்டில் மின் இணைப்பு உள்ளதா இல்லையா?
17. வீட்டில் கழிவறை உள்ளதா?
18. கழிவறையின் வகை என்ன?
19. கழிவு நீர் அகற்றும் வசதி உள்ளதா?
20. குளியல் அறை உள்ளதா?
21. சமையல் அறை மற்றும் சமையல் எரிவாயு உள்ளதா?
22. சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் என்ன?
23. ரேடியா, டிரான்சிஸ்டர் உள்ளதா?
24. டிவி உள்ளதா?
25. இன்டர்நெட் வசதி இருக்கிறதா?
26. லேப்டாப்/கம்ப்யூட்டர் இருக்கிறதா?
27. தொலைபேசி/செல்போன்/ஸ்மார்ட் போன் உள்ளதா?
28. சைக்கிள்/ஸ்கூட்டர்/பைக்/மொபட் உள்ளதா?
29. கார்/ஜீப்/வேன் உள்ளதா?
30. குடும்ப உறுப்பினர்கள் அதிகம் சாப்பிடும் பருப்பு வகை என்ன?
31. செல்போன் எண். ஆகிய 31 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து மக்கள் தொகை பதிவேட்டுக்கான(என்பிஆர்) விவரங்களை சேகரிக்கும் பணியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…