நவம்பர் 2-ம் தேதி கல்லறை திருநாள் ரத்து! – சென்னை கல்லறை அறக்கட்டளை
நவம்பர் 2-ம் தேதி கல்லறை திருநாள் ரத்து.
ஒவ்வொரு வருடமும் நவ-2ம் தேதி, மறைந்த கிறிஸ்தவர்களின் கல்லறைக்கு அவர்களது உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த வருடம் கொரோனா எதிரொலியால், இந்த வழக்கத்தை தவிர்க்குமாறு, சென்னை கல்லறைகள் அமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, ‘சென்னை மயிலை கத்தோலிக்க பேராயம் மற்றும் தென்னிந்திய திருச்சபை பேராயத்தின் ஆலோசனைப்படி, இந்த வருடம் நவ.2ம் தேதியன்று கீழ்பாக்கம் மற்றும் காசிமேடு கல்லறைகள் பூட்டி வைக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாகவும், அரசின் அறிவுரையின்படியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் மாதம் மற்ற நாட்களில் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.