ஏழை மக்களுக்கு சலுகை விலையில் சிமெண்ட் …….! உற்பத்தியாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை..!
ஏழை மக்களுக்கு சலுகை விலையில் சிமெண்ட் வழங்குவது குறித்து தமிழக அரசுடன் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை.
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் சிமெண்ட்,ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.
இதனையடுத்து,கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு,கட்டுமானப் பொருட்களின் உற்பத்தியாளர்களுடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்,பேச்சுவாரத்தை நடத்தினார்.
இந்நிலையில்,விலையேற்றம் குறித்து தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் கூறுகையில்:”கொரோனா இரண்டாவது அலையால் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன.மேலும்,40 சதவிகித தொழிலாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கி வருவதால் விலை ஏற்றமானது தவிர்க்க முடியாததாக உள்ளது.
எனினும்,ஏழை மக்களுக்கு சலுகை விலையில் சிமெண்ட் வழங்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்.எனவே,தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அரசுடன் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் இணைந்து செயல்படுவோம்”,என்று தெரிவித்துள்ளது.