நாளை முதல் இந்த கோவிலுக்கு செல்பொன் கொண்டு செல்ல தடை..!
திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடியோ, புகைப்பட கருவிகளை பழனிமலை கோயிலுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
மலையடிவாரத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளில் பக்தர்கள் செல்போன்களை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாத விநாயகர் கோயில், ரோப் கார், ரயில் நிலையப் பகுதிகளில் அமைக்கப்பட்ட அறைகளில் செல்போனை வைக்கலாம்.
பாதுகாப்பு அறையில் செல்போன் போன்றவற்றை வைக்க ரூ.5 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், கோவில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், கருவறையில் உள்ள தெய்வங்களை புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என்ற காரணத்திற்காக செல்போன் கொண்டு செல்ல கோவில் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.