செல்போன் விலை 199 மட்டுமே – சலுகை அறிவித்து சிக்கிக்கொண்ட சம்பவம்!

Default Image

புதுக்கோட்டையில் 199 ரூபாயில் செல்போன் வழங்கப்படும் என்று அறிவித்து பாதியிலே அறிவிப்பை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

புதுக்கோட்டை நகரின் மெயின் சாலையில் இன்று புதிதாக ஒரு செல்போன் கடை ஓன்று தொடங்கப்பட்டுள்ளது. கடையின் ஆரம்ப சலுகையாக முதலில் வரும் 100 பேருக்கு 199 ரூபாயில் கைபேசி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை அடுத்து இன்று கடை தொடங்கும் முன்னரே கடைக்கும் முன் கூட்டம் அலை மோதியது.

புதிதாக கடை திறக்கப்பட்ட பின், வரிசையில் நின்ற 20 பேருக்கு மட்டும் செல்போன் வழங்கிவிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டதாக அறிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீதி பேர் கடை உரிமையாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கடை உரிமையாளர்  100 பேருக்கு எங்களால் செல்போன் வழங்க இயலாது என்று தெரிவித்தார். மேலும் வாடிக்கையாளர் சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்