செல்போன் கதிர் வீச்சு உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறதோ இல்லையோ… குடும்பத்தினரிடையே பிரிவை ஏற்படுத்துகின்றன…..
சென்னை உயர்நீதிமன்றம் செல்போன் கதிர் வீச்சு உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறதோ இல்லையோ செல்ஃபோன்கள் குடும்பத்தினரிடையே பிரிவை ஏற்படுத்துவதாக வேதனை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் அன்னூரில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரத்தை அகற்றும் பேரூராட்சியின் உத்தரவுக்கு எதிராக இண்டஸ் டவர்ஸ் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த நிறுவனம் கோபுரம் அமைக்க அதிகாரிகளிடம் அனுமதி பெற்றிருக்காவிட்டால் அனைத்து ஆவணங்களுடன் ஒரு மாதத்தில் விண்ணப்பிக்கவும், அதனை விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கவும் உத்தரவிட்டனர். கர்ணனின் கவச குண்டலம் போல செல்போன் மக்களின் உடல் அங்கமாக மாறிவிட்டதாக தெரிவித்த நீதிபதிகள், பல்வேறு குற்றங்களுக்கும் செல்போன்கள் முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.