சென்னை வடபழனியில் உள்ள பிரபல அம்பிகா எம்பயர் என்ற நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றை விற்க போவதாக கூறி மூன்று பேர், கேரள கட்டுமான நிறுவனத்தை அணுகியுள்ளனர். இதனையடுத்து அந்த நிறுவன மேலாளர், விற்பதாக கூறப்படும் நட்சத்திர விடுதியை பார்வையிட வந்துள்ளார். பின்னர் அவரை அழைத்து வந்த தரகர்கள், அதே நட்சத்திர விடுதியில், அவருக்கு தெரியாமல் அறை ஒன்றை புக்கிங் செய்து அதில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து நட்சத்திர விடுதியை பார்வையிடுவது போல், சுற்றிக்காட்டிய மூவரும் 165 கோடி ரூபாய்க்கு விடுதியை பேரம் பேசியுள்ளனர்.
இயதையடுத்து, அவர்களின் நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த நட்சத்திர விடுதியின் மேலாளர், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். விடுதிக்கு வந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது தான், நூதன மோசடி தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தரகர்கள் தட்சணாமூர்த்தி, பரமானந்தன், கருணாகரன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதுபோன்று பலரிடமும் ஏமாற்றி இந்த கும்பல் மோசடி செய்துள்ளதும், விசாரணையில் தெரியவந்ததால், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…