பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் – டான் படம் பார்த்த பின் ராமதாஸ் ட்வீட்
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் என ராமதாஸ் ட்வீட்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “டான்”. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மதியொளி நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், டாக்.ராமதாஸ் டான் திரைப்படத்தை பார்த்து விட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)” என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!’ என பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)” என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!@Siva_Kartikeyan @Dir_Cibi #Don
— Dr S RAMADOSS (@drramadoss) June 15, 2022