சென்னையில் இந்த பகுதிகளில் பேருந்து நிறுத்தங்கள் மாற்றம்!

சென்னையில் நூற்றுக்கணக்கான பேருந்து நிறுத்தங்கள் 100 மீட்டர் தள்ளி அமைக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

Metropolitan Transport Corporation

சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி இடம் மாற்ற மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக பிராட்வே – முகப்பேர் (7M), வடபழனி – தரமணி (5T) ஆகிய இரு வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டு சென்னை மாநகராட்சியிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாநகரப் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக சிக்னல் மற்றும் மேம்பாலங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்