காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்.. ரூ.38 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு
காவல் நிலைய சிசிடிவி கேமராக்கள் ரூ.38 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளன என்று தமிழக அரசு தகவல்.
தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலைய சிசிடிவி கேமராக்கள் ரூ.38 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளன என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, 1,578 காவல் நிலையங்களில் புதிய சிசிடிவி கேமராக்களை பொருத்த, பழைய கேமராக்களை புதுப்பிக்க ரூ.38.35 கோடி தமிழக அரசு ஒதிக்கீடு செய்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், 1578 காவல் நிலையங்களில் 12 முதல் 18 மாதங்கள் வரை காட்சிகளை சேமிக்கக் கூடிய கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்க உள்ளன எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதி மூலம் சிசிடிவி கேமரா பதிவுகளை அதிகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தி நகர் காவல் நிலையத்துக்கு தன்னை அழைத்து சென்று மிரட்டியதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் கிருஷ்னண் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.