நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க CCTV கேமரா..? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு..!

நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க நீர்நிலைகளில் CCTV கேமரா அமைக்க ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க கடற்கரைகள், அருவிகள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும், 24 மணி நேரமும் நீச்சலில் திறமை பெற்ற பாதுகாப்பு குழுவை அமைக்க வேண்டும் என கோட்டீஸ்வரி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள், CCTV கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சாத்திய கூறுகள் உள்ளதா..? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.