சிபிஎஸ்இ தேர்வு – பள்ளிகளே முடிவு செய்து கொள்ளலாம்..!
சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்படும் என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி முதல் பருவத் தேர்வு நவம்பர் -டிசம்பர் மாதத்திலும், 2-ஆம் பருவத் தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 9-ம் தேதி வரை நடைபெறும். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு டிசம்பர் 1 முதல் 18-ம் தேதி வரை நடைபெறயுள்ளது. இதற்கிடையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம். தேர்வை நடத்துவதா..? வேண்டாமா ..? என்பது பற்றி பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம். தேர்வு ரத்து செய்யப்பட்டால் அது குறித்த அறிக்கையை சிபிஎஸ்இ போர்டுக்கு அனுப்பவும் சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?
February 25, 2025
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025