சிபிஎஸ்இ கம்பார்ட்மென்ட் தேர்வு 2022: 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் இந்தத் தேதியிலிருந்து தொடங்கும்..
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகஸ்ட் 23 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான கம்பார்ட்மென்ட் தேர்வுகளை நடத்தும் என்றும் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.nic.in இல், முழு தேர்வு அட்டவணையும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 22 அன்று, சிபிஎஸ்இ 2022 ஆம் ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவித்தது. தேர்வுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்கள் இந்த மாதம் நடைபெறும் சிபிஎஸ்இ கம்பார்ட்மென்ட் தேர்வில் பங்கேற்கலாம். செப்டம்பர் 2022 இல், கம்பார்ட்மென்ட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இதுவரை கம்பார்ட்மென்ட் தேர்வுக்கு பதிவு செய்யாதவர்கள், இப்போது தாமதக் கட்டணத்துடன் பதிவு செய்யலாம். கம்பார்ட்மென்ட் தேர்வு விண்ணப்பக் காலம் ஜூலை 30, 2022 அன்று நிறைவடைந்தது. தாமதக் கட்டணமாக ரூ. 2000 செலுத்தி தேர்வுக்கான படிவங்களை ஆகஸ்ட் 8, 2022 வரை சமர்ப்பிக்கலாம்.