திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி திமுகவின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,திமுகவின் புகார் மீது முதற்கட்ட விசாரணை எப்போது முடியும்? என லஞ்சஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டது. முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு ஜூன் 22-ம் தேதி முதலே திமுகவின் புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்சஒழிப்புத்துறை தெரிவித்தது.
இதனால் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தப் பணிகளை தனது உறவினர்கள், பினாமிக்கு வழங்கியதாக முதல்வர் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தினசரி விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது.நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை.ஆனால் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது.அதில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று (அக்டோபர் 12 ஆம் தேதி ) திமுக சார்பில் தொடரப்பட்ட சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் 1 வாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் 3 மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை சிபிஐ முடிக்க வேண்டும்.ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் எனவும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைத்தது திமுக.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…