தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளளது.
கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில் , யானைகளின் எண்ணிக்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. யானைகள் வளங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகுக்கிறது. ஆனால் சிலர் தந்தங்களுக்காக யானைகளை கொடூரமாக கொள்கின்றனர்.
கடந்த 2018-ம் ஆண்டு 84 யானைகள் உயிரிழந்தன. மேலும், தற்போதும் யானைகளின் உயிரிழப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் யானை இனமே அழியும் சூழ்நிலை ஏற்படலாம். ஆகையால் இதுகுறித்து சிபிஐ மற்றும் தேசிய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு விசாரிக்க உத்தரவிட கோரிக்கை வைத்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் சதீஸ் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பித்தனர்.
யானைகளை தந்தங்களுக்காக வேட்டையாடுவது ஏற்கத்தக்கதல்ல, யானைகளை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. யானைகள் வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை தாமதமின்றி அகற்ற தமிழக அரசுக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
சம்பந்தப்பட்ட துறை செயலாளருடன் ஆலோசித்து பதில் மனு தாக்கல் செய்த தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…